புத்தளம் மாவட்டத்துக்கு ஆளுனர் முசம்மில் விஜயம் - sonakar.com

Post Top Ad

Friday, 27 March 2020

புத்தளம் மாவட்டத்துக்கு ஆளுனர் முசம்மில் விஜயம்


புத்தளம் மாவட்டத்தில் கொரொனா பரவலைத் தடுக்கும் வகையிலும் அப்பிரதேச சுகாதார நிலை நிலை தொடர்பாக நேரில் கண்டறிவதற்குமாக வடமேல் மாகாண ஆளுநர்  ஏ. ஜே. எம் முஸம்மில் அங்கு திடீர் விஜயம் மேற்கொண்டார்.அவர் முதலாவதாக ஆனைமடுவையிலுள்ள சதொச களஞ்சியசாலைக்குச் சென்று பொது மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் போதுமானளவு உள்ளாதா எனவும் உணவுப்  பொருட்கள் குறைந்;த விலையில் விற்பனை செய்யப்படுகின்றதா எனவும்  நேரில் சென்று பார்வையிட்டார். 

ஊரடங்கு தளர்த்து வேளையில்  ஏனைய ஆடம்பரப் பொருட்களைத் தவிர்த்து  குறிப்பாக அத்தியாவசியப் பொருகள் மட்டும் விநியோகிக்கப்பட வேண்டும் என்று சதொச அதிகாரிகளுக்கு ஆளுநர் அதன் போது ஆலோசனை வழங்கினார். 

அதேவேளை ஊரடங்கு வேளையில் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கான ஊரடங்கு வேளையில் பயணம் செய்வதற்கான அனுமதிப் பத்திரம் வழங்க வேண்டும் என்று ஆளுநர்  பிரதிப் பொலிஸ் மாஅதிபருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

அத்துடன் தனிமைபடுத்தப்பட்டு சுய நிவாரணம் பெற்றுக் கொள்வதற்காக புத்தளத்திலுள்ள அமெரிக்கா முகாமை அரசாங்கம் பயன்படுத்துவதற்காக எடுத்துள்ள இடத்தை ஆளுநர் நேரில் சென்று பார்வையிட்டதுடன் அதில் நடைமுறைப்படுத்தப்படும் முறைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களிலும் அவர் ஈடுபட்டார்.

-இக்பால் அலி


No comments:

Post a comment