தேர்தலில் குதிக்கும் குருநாகல் வைத்தியசாலை பணிப்பாளர் - sonakar.com

Post Top Ad

Saturday, 7 March 2020

தேர்தலில் குதிக்கும் குருநாகல் வைத்தியசாலை பணிப்பாளர்


மருத்துவர் ஷாபி சட்டவிரோத கருத்தடை நடவடிக்கைகளை செய்து வந்ததாக சர்ச்சையைக் கிளப்பி, சுகாதார திணைக்கள கட்டுப்பாடுகளை மீறி தன்னிச்சையாக இயங்கி வந்த குருநாகல் வைத்தியசாலை பணிப்பாளர் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக தேர்தலில் போட்டியிடுவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்.இதற்கமைவாக வைத்தியசாலை தாதி மாரையும் கட்டாய கூட்டங்களில் அமர வைப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் தேர்தல் ஆணைக்குழுவில் முறையிடப்படவுள்ளதாக அறியமுடிகிறது.

குறித்த சர்ச்சையை பொதுஜன பெரமுன ஆதரவு சக்திகளே உருவாக்கியதாக முன்னர் அரசியல் தலைமைகள் சுட்டிக்காட்டி வந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment