கதவை மூடச் சொல்லியிருந்தால் மூடியிருப்போம்: ஹொ'பொத்தான சம்பவம்! - sonakar.com

Post Top Ad

Friday, 27 March 2020

கதவை மூடச் சொல்லியிருந்தால் மூடியிருப்போம்: ஹொ'பொத்தான சம்பவம்!

https://www.photojoiner.net/image/WUkdx76K

ஹொரவபொத்தான, கிவுலேகடயில் இன்று ஜும்மா தொழுகைக்காக ஒன்று கூடி பொலிசாரின் வருகையையடுத்து சிதறுண்டு ஓடிய சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில் அது குறித்து பொலிசுக்கு விளக்கமளித்துள்ள பள்ளிவாசல் நிர்வாகம், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அனுப்பியிருந்த கடிதத்தில் பள்ளிவாசல் கதவுகளை மூடும் படி சொல்லப்படவில்லையெனவும் அப்படியொரு அறிவுறுத்தல் வந்திருந்தால் பள்ளிக் கதவையும் மூடி வைத்திருப்போம் எனவும் தெரிவித்துள்ளது.சுமார் 70 பேர் ஜும்மா தொழுகைக்காக கூடியிருந்த நிலையில் அவர்களில் பெரும்பாலானோர் பொலிசாரின் வருகையறிந்து தப்பியோடியுள்ளனர்.

இந்நிலையில் பள்ளித் தலைவர் உட்பட 17 பேர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த பள்ளிவாசலில் இவ்வாறான தவறு நிகழாது என பொலிசாருக்கு வாக்குறுதியுமளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு கூட்டுத் தொழுகை மற்றும் பள்ளிவாசல் நிகழ்வுகளை தவிர்க்குமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா முன்னதாகவே வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment