உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி! - sonakar.com

Post Top Ad

Monday, 30 March 2020

உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி!

https://www.photojoiner.net/image/JCWlSh9X

கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழும்பு மேயர் தயான் லன்சா.முஸ்லிம் நபரின் உடலத்தினை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்வதற்கு அனுமதிப்பதாகவே முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. எனினும், சட்டவிதிகளுக்கு அமைவாக அவசர அடக்கத்திற்கு மாளிகாவத்தை மையவாடியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாகவே அங்குள்ள தகவல் மூலங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் குறித்து தகவல் திரட்ட சோனகர்.கொம் மேற்கொண்ட முயற்சியின் போது தகவல் பரிமாற்றக் குழப்ப சூழ்நிலையொன்று உருவாகியுள்ளதாக விளக்கமளிக்கப்பட்ட அதேவேளை குடும்பத்தினர் அனைவரும் தனிமைப்படுத்தலில் உள்ளதால் எதையும் செய்ய முடியாத உதவியற்ற நிலை இருந்துள்ளமையை அறியமுடிகிறது.

இது குறித்து நாம் தொடர்பு கொண்ட அரசியல் பிரமுகர்கள் விபரமறிந்துள்ள நிலையில் உடனடி தீர்வொன்றைக் காண்பதற்கான முயற்சியை மேற்கொள்வதாகவும் ஜனாதிபதியின் உத்தரவையும் மீறி அலட்சியம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

ராஜா said...

அரசியல் ஆதிக்கம்

Post a comment