உடன்பாட்டை மீறி உடல் எரித்தமை அத்து மீறல்: அசாத் விசனம்! - sonakar.com

Post Top Ad

Monday, 30 March 2020

உடன்பாட்டை மீறி உடல் எரித்தமை அத்து மீறல்: அசாத் விசனம்!


கொரோனா வைரசினால் இலங்கையில் இறந்த இரண்டாவது நபரின் உடலம் பசப்பு காரணங்களை முன் வைத்து எரியூட்டப்பட்டுள்ளமை பாரிய கவலையைத் தருவதோடு இது அத்து மீறல் என விசனம் வெளியிட்டுள்ளார் முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி.இச்சம்பவம் குறித்து, தான் பல தரப்பட்ட நபர்களுடன் உரையாடியதாகவும் குடும்ப உறுப்பினர்களுக்கோ சமூகத்துக்கோ சரியான வாய்ப்பினை வழங்காமல் அவசர அவசரமாக உடலை எரித்துள்ளமை ஏலவே ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவையும் உடன்பாட்டையும் மீறிய செயல் எனவும் அவர் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

இனிமேலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமலிருப்பதற்கான வெளிப்படையான நடவடிக்கையொன்று அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ள அவர், ஏலவே இருந்த உடன்பாடு மீறப்பட்டுள்ளமையானது வருத்தமளிப்பதாகவும் அரசியல் தலைமைகள் இது விடயத்தில் உடனடியாக காத்திரமான நடவடிக்கைக்கு முன் வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a comment