ஓரிரு வருடங்களில் சு.க காணாமல் போய்விடும்: SLPP - sonakar.com

Post Top Ad

Saturday, 8 February 2020

ஓரிரு வருடங்களில் சு.க காணாமல் போய்விடும்: SLPP


தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களான மஹிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபே ராஜபக்சவின் படங்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உபயோகப்படுத்தக் கூடாது என நேரடியாக அக்கட்சியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் தாரக பாலசூரிய.


சு.க - பெரமுன இடையேயான இணக்கப்பாடு பல விடயங்களில் தொடர்ந்தும் முரண்பாடுகளை எதிர் நோக்கி வரும் நிலையில் சுதந்திரக் கட்சியினர் தமது தலைவர் மைத்ரிபால சிறிசேனவின் படத்தையே பாவிக்க வேண்டும் எனவும் கோட்டா - மஹிந்தவின் படங்களை பாவிக்க கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

எப்படியும் இன்னும் ஓரிரு வருடங்களில் சுதந்திரக் கட்சி அடையாளம் தெரியாமல் போய்விடும் எனவும் தாரக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment