கோட்டாவை வெல்ல வைத்த விகாராதிபதிகளுக்கு JP பட்டம்: நிமல் - sonakar.com

Post Top Ad

Tuesday, 25 February 2020

கோட்டாவை வெல்ல வைத்த விகாராதிபதிகளுக்கு JP பட்டம்: நிமல்கோட்டாபே ராஜபக்சவை ஜனாதிபதி தேர்தலில் வெல்ல வைத்த முழுப் பெருமையும் விகாரைகளுக்கும் பௌத்த துறவிகளுக்கும் உரியது என தெரிவித்துள்ளார் அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா.இதற்குக் கைமாறாக வெற்றிக்குப் பங்களித்த அனைத்து விகாராதிபதிகளுக்கும் சமாதான நீதிவான் பட்டம் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நான்கு வருடங்களுக்கு மேலாக விகாரைகள் ஊடாக பிரச்சாரங்களை மேற்கொண்டு சிங்கள தேசத்தின் சிங்கள தலைவர் என்ற அடிப்படையை உருவாக்கியதன் பின்னணியில் ஏனைய சமூகங்களின் பங்களிப்பை ஜனாதிபதி தனது பதவியேற்புரையில் ஏற்றுக்கொள்ளத் தவறியிருந்தமை நினைவுகூறத்தக்கது.

No comments:

Post a Comment