முன்னாள் ஸ்ரீலங்கன் CEOவை கைது செய்ய முஸ்தீபு - sonakar.com

Post Top Ad

Monday, 3 February 2020

முன்னாள் ஸ்ரீலங்கன் CEOவை கைது செய்ய முஸ்தீபுஎயார்பஸ் கொள்வனவு ஊழல் விவகாரத்தின் பின்னணியில் முன்னாள் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவையும் அவரது பாரியாரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார் சட்டமா அதிபர்.இப்பின்னணியில் இருவரையும் கைது செய்வதற்கான உத்தரவை நீதிமன்றில் பெற்றுக்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எயார்பஸ் நிறுவனம் சர்வதேச ரீதியில் ஊழலில் ஈடுபட்டுள்ளமை பற்றி தகவல் வெளியாகியுள்ள நிலையில் இலங்கைக்கான விற்பனையிலும் ஊழல் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. இப்பின்னணியில் இக்கைது நடவடிக்கை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment