அரச நிதியில் மஹிந்தவின் குடும்பம் இந்தியா செல்லவில்லை: பந்துல - sonakar.com

Post Top Ad

Friday, 14 February 2020

அரச நிதியில் மஹிந்தவின் குடும்பம் இந்தியா செல்லவில்லை: பந்துல


அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இந்திய பயணத்தின் போது அவரது குடும்ப உறுப்பினர்களும் இணைந்திருந்தமை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், மஹிந்த ராஜபக்சவை தவிர வேறு யாருக்கும் அரசாங்கம் 'செலவு' செய்யவில்லையென தெரிவிக்கிறார் பந்துல குணவர்தன.

பொதுவாக அரசியல்வாதிகளின் வெளிநாட்டு பயணங்களின் போது நட்சத்திர ஹோட்டல்கள், சொகுசு போக்குவரத்து மற்றும் ஏனைய வசதிகளை வெளியுறவுத்துறை அமைச்சே ஏற்பாடு செய்கின்றமையும் பரிபாளங்கள் ஒரே இடத்திலேயே தங்குகின்ற வழமை உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment