தங்கம் தோண்டிய இராணுவ கேர்ணல் மற்றும் குழு கைது - sonakar.com

Post Top Ad

Sunday, 9 February 2020

தங்கம் தோண்டிய இராணுவ கேர்ணல் மற்றும் குழு கைது


கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் விடுதலைப் புலிகளினால் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் தங்கம் தோண்டியெடுக்க முயன்ற இராணுவ கேர்ணல், இரு சிப்பாய்கள் உட்பட 21 பேர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


அநுராதபுரம், கிளிநொச்சி மற்றும் பரந்தன் பகுதிகளில் குடியிருக்கும் இராணுவ சிப்பாய்களே இதில் ஈடுபட்டுள்ளதுடன் குறித்த நபர்கள் சீருடையிலேயே தங்கம் தோண்டச் சென்றுள்ளனர்.

விடுதலைப்புலிகளினால் புதைக்கப்பட்டிருப்பதாகக் கருதப்படும் தங்கத்தைத் தேடி அவ்வப்போது இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment