மகா சங்கத்தினரின் 'சொல்-பேச்சு' கேட்டு நடக்கிறோம்: மஹிந்த - sonakar.com

Post Top Ad

Friday, 28 February 2020

மகா சங்கத்தினரின் 'சொல்-பேச்சு' கேட்டு நடக்கிறோம்: மஹிந்த


கடந்த அரசாங்கத்தைப் போன்றில்லாது நடைடுறை அரசு மகா சங்கத்தினரின் சொல்-பேச்சு கேட்டு நடப்பதோடு உரிய மரியாதையையும் கொடுப்பதாக தெரிவிக்கிறார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.விகாரைகள் ஊடான வலையமைப்பினைப் பயன்படுத்தி தனிச் சிங்கள அரசு எனும் கோசம் ஊடாகப் பெறப்பட்ட ஜனாதிபதி பதவியை மேலும் வலுப்படுத்தும் வகையில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் பொதுத் தேர்தலை வெல்வதற்கான நடவடிக்கைகளை பெரமுன முடுக்கிவிட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த அரசைப் பொன்று பௌத்த மகா சங்கத்தினரை மன சங்கடப்படுத்தவோ, மரியாதைக் குறைவாக நடத்தவோ தமது அரசு ஒரு போதும் அனுமதிக்காது எனவும் உரிய கௌரவத்தை வழங்கி பின்பற்றி நடப்பதாகவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment