அடுத்த வருடம் முதல் முதலாம் தவணை பரீட்சை இல்லை - sonakar.com

Post Top Ad

Wednesday, 26 February 2020

அடுத்த வருடம் முதல் முதலாம் தவணை பரீட்சை இல்லைமுதலாம் பாடசாலை தவணை காலங்களின் போது அனைத்து பாடசாலைகளிலும் உள்ளக விளையாட்டு, கல்வி சுற்றுலா, கண்காட்சி, மாபெரும் கிரிக்கெட் போட்டி உட்பட பல்வேறு உற்சவங்கள் மற்றும் வேறு விடயங்களுக்கான செயற்பாட்டு நடவடிக்கைகள் நடாத்தப்படும்.இதன்காரணமாக முதலாம் தவணை பரீட்சையின் போது மாணவர்கள் எவ்வித முன் ஏற்பாடுகளும்  இன்றியும் பரீட்சைகளுக்கு தோற்றுவதற்கு தயார் இல்லாமல் பரீட்சைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். இதனால் பரீட்சைகளில் தவறுகள் நடக்கலாம் என கருதி பல மாணவர்கள் கல்வி சுற்றுலா, விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கும் நிலைமைகளை அதிகமாக அவதானிக்க முடிகின்றது. அத்துடன் முதலாம் தவனை பாடசாலை காலப்பகுதியின் போது அனைத்து பாடசாலைகளின் அதிபர்களும் ஆசிரியர்களும் வேலைப்பழுவுடனே காணப்படுகின்றனர்.

இவ்வாறான காரணங்களை ஆராய்ந்து பார்த்த பின்னர் எதிர்வரும் காலங்களில் முதலாம் தவணை காலங்களில் போது அனைத்து பாடசாலைகளிலும் முதலாம் தவணைக்கான பரீட்சையை நடாத்தாமல் இருப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

எனினும் இவ்வருடத்திற்கான முதலாம் தவணை பரீட்சையை நடாத்த அனைத்து ஏற்பாடுகளும் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வருடம் மாத்திரம் முதலாம் தவணை பரீட்சை நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு அனைத்து பாடசாலை பிரதானிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

-MOE

No comments:

Post a Comment