பெட்மின்டன்: சர்வதேச நடுவர் பயிற்சிக்கு வா'சேனை இளைஞர் தெரிவு - sonakar.com

Post Top Ad

Monday, 10 February 2020

பெட்மின்டன்: சர்வதேச நடுவர் பயிற்சிக்கு வா'சேனை இளைஞர் தெரிவுவிளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் பந்து பெட்மின்டனின் சர்வதேச நடுவர் தரம் 2 இற்கான விஷேட பயிற்சி நெறிக்காக வாழைச்சேனையைச் சேர்ந்த அல் அக்ஸா விளையாட்டுக் கழகத்தின் செயலாளர் ஏ.எல்.எம்.இர்பான் இந்தியா செல்வதற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.இலங்கையில் நடாத்தப்பட்ட தரப்படுத்தல் பரீட்சையின் அடிப்படையில் விளையாட்டுத்துறை அமைச்சினால் தெரிவான 8 பேரில் இவரும் ஒருவராவார். இவர் வடகிழக்கு மாகாணத்தின் பந்து பெட்மின்டனின் இணைப்பாளராகவும், கல்குடா அஸ்பெக் அகடமியின் பணிப்பாளராகவும் செயற்பட்டு வருகின்றார்.

குறித்த பயிற்சி நெறியை மேற்கொள்ள தெரிவு செய்யப்பட்டுள்ள குழுவினர் இம்மாதம் 17 ம் திகதி இந்தியாவுக்கு பயணமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-எச்.எம்.எம்.பர்ஸான்

No comments:

Post a Comment