700 வருடங்களாக பள்ளிவாசல் இல்லாத ஊர்; நீங்களும் உதவலாம்! - sonakar.com

Post Top Ad

Monday, 10 February 2020

700 வருடங்களாக பள்ளிவாசல் இல்லாத ஊர்; நீங்களும் உதவலாம்!


ஒரு காலத்தில் இஸ்லாமிய ஆட்சிக்குள் இருந்த ஸ்பெயினில், செவில் எனும் ஊரில் 700 வருடங்களாக நிறைவான பள்ளிவாசல் ஒன்று இல்லாத குறையை நீக்குவதற்கான முயற்சி இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.2002 முதல் பிறிதொரு கட்டிடத்தில் முஸ்லிம் கலாச்சார மையம் ஒன்று இயங்கி வருகின்ற போதிலும் அங்கு இஸ்லாமிய கலையம்சங்களுடனான பள்ளிவாசல் ஒன்றை அமைப்பதற்கான நிதி சேகரிக்கப்பட்டு வருகிறது. இன்ஷா அல்லாஹ், இதில் பங்கெடுக்க விரும்பினால் நேரடியாக கீழ்க்காணும் இணையத்தளம் ஊடாக உங்கள் நிதியுதவிகளை செய்யலாம், அல்லது சோனகர்.கொம்மின் இச்செய்தியினை ஏனைய நல்லுள்ளங்களுடன் பகிர்ந்து அவர்கள் ஊடாக உதவிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கும் நீங்கள் பங்களிக்கலாம்.

6 இலட்சம் டொலர் நிதியினைப் பெற்று பிரத்யேக பள்ளிவாசல் ஒன்றை அமைக்கும் இத்திட்டத்துக்கு உலகளாவிய அளவில் நிதியுதவிகள் பெறப்பட்டு வருவதுடன் பெப்ரவரி 2020 இறுதிக்குள் இந்நிதியைத் திரட்ட முயற்சி இடம்பெற்று வருகிறது. இன்ஷா அல்லஹ், கீழ்க்காணும் இணைப்பில் க்ளிக் செய்து உங்கள் பங்களிப்பை வழங்குங்கள்.

No comments:

Post a Comment