சாய்ந்தமருது: பின் வாங்கிய அரசு; வர்த்தமானி இரத்து! - sonakar.com

Post Top Ad

Thursday, 20 February 2020

சாய்ந்தமருது: பின் வாங்கிய அரசு; வர்த்தமானி இரத்து!


சாய்ந்தமருதுக்கான தனியான நகர சபையை உருவாக்குவதற்கு அங்கீகாரமளித்து வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானியை இரத்துச் செய்துள்ளது அரசு.அமைச்சரவை இணங்காமேயே காரணம் என தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை இது குறித்து விளக்கமளித்துள்ள பந்துல குணவர்தன, சாய்ந்தமருதுக்கு மாத்திரமன்றி ஏனைய இடங்களிலும்  உருவாக்கப்பட வேண்டிய உள்ளூராட்சி சபைகளையும் ஆராய்ந்து ஒரே தடவையில் அவற்றை அங்கீகரிக்க ஆலோசிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நீண்ட இழுபறியிலிருந்த சாய்ந்தமருது விவகாரத்தை தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைய மஹிந்த ராஜபக்ச நிறைவேற்றி விட்டதாகவும் அதற்கு அதாவுல்லாஹ்வே காரணம் எனவும் இரு தரப்பு ஆதரவாளர்களும் கொண்டாடி வந்த நிலையில் அரசு இவ்வாறு பின் வாங்கியுள்ளமையும் ரதன தேரர் உட்பட கடும்போக்குவாதிகளும் விமர்சனம் வெளியிட்டு வந்த நிலையில் இவ்வாறு நடந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment