ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளில் திருப்தியில்லை: கார்டினல் - sonakar.com

Post Top Ad

Tuesday, 18 February 2020

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளில் திருப்தியில்லை: கார்டினல்


ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் விசாரணைகளில் திருப்தி காண முடியவில்லையென தெரிவிக்கினார் கார்டினல் மெல்கம் ரஞ்சித்.முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு உறுப்பினர்கள் விசாரணைகளை நடாத்துகின்ற போதிலும் அது தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவோ, பொலிசோ போதிய அக்கறை காட்டவில்லையென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குற்றவாளிகளை அடையாளங்காணுவது மாத்திரமன்றி அப்பாவி பொது மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பை அலட்சியப்படுத்திய அதிகாரிகளையும் சட்டத்திற்கு முன் நிறுத்தியாக வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment