கவனிப்பாரற்றுக் கிடக்கும் வாழைச்சேனை மணிக்கூட்டுக் கோபுரம் - sonakar.com

Post Top Ad

Sunday, 23 February 2020

கவனிப்பாரற்றுக் கிடக்கும் வாழைச்சேனை மணிக்கூட்டுக் கோபுரம்


கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட ஹைராத் பள்ளிவாசலுக்கு முன்னால் அமைந்துள்ள மணிக்கூட்டுக் கோபுரத்தை புனரமைத்து மீளவும் இயங்க வைக்குமாறு பிரதேசவாசிகளால் சுட்டிக் காட்டப்படுகிறது.பல வருடங்களாக மணிக்கூட்டுக் கோபுரம் சிதைவடைந்து மணிக்கூடு இயங்காமல் காணப்படுவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே கவனிப்பாரற்றுக் காணப்படும் குறித்த மணிக்கூட்டுக் கோபுரத்தை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி புனரமைத்துத் தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

-எச்.எம்.எம்.பர்ஸான்

No comments:

Post a Comment