விமல் வீரவன்சவுடனான 'உறவு' ஒரு நாளும் குலையாது: மஹிந்த - sonakar.com

Post Top Ad

Sunday, 23 February 2020

விமல் வீரவன்சவுடனான 'உறவு' ஒரு நாளும் குலையாது: மஹிந்த


விமல் வீரவன்சவுடனான உறவும் அவர் மீது கொண்டிருக்கும் அன்பும் எக்காரணத்தைக் கொண்டும் ஒரு போதும் குறையாது என்கிறார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.விமல் வீரவன்சவின் 20 வருட நாடாளுமன்ற வாழ்க்கையைக் கொண்டாடும் நிமித்தம் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வில் வைத்தே மஹிந்த இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பி வேட்பாளராக அறிமுகமான காலத்திலிருந்து கொழும்பு மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று வரும் விமல், தான் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்ற போது ஏனையோர் கொண்டாடிக் கொண்டிருக்க, தன்னைப் பாதுகாப்பாக வீட்டுக்கு அழைத்துச் சென்றவர் எனவும் ஒரு நாளும் தமது நட்புக்கு இடையூறு வராது எனவும் தெரிவிக்கின்றமை குறிபபிடத்தக்கது.

No comments:

Post a Comment