விமல் வீரவன்சவின் 'ஊழல்' வழக்கு: செப்டம்பரில் விசாரணை - sonakar.com

Post Top Ad

Wednesday, 12 February 2020

விமல் வீரவன்சவின் 'ஊழல்' வழக்கு: செப்டம்பரில் விசாரணை2009 - 2014 வரையான காலப்பகுதியில் அமைச்சராகப் பதவி வகித்திருந்த போது சட்டவிரோதமாக 75 மில்லியன் ரூபா சொத்துக்கள் சேர்த்த குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள விமல் வீரவன்சவின் வழக்கு செப்டம்பரில் விசாரிக்கப்படவுள்ளது.உயர் நீதிமன்றில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கே இவ்வாறு தேதி குறிக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய பிரதிவாதிகளுக்கும் அழைப்பாணை விடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

2018 ஒக்டோபரில் 13 நாட்கள் அமைச்சுப் பதவியில் இருந்த விமல் வீரவன்ச 4500 பேருக்கு அரச தொழில்வாய்ப்பை வழங்கியதுடன் போலிக் கடவுச்சீட்டு உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் சகிதம் நடைமுறை அரசிலும் அமைச்சுப் பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment