சு.க தலைமைப் பதவியை இலக்கு வைக்கும் தயாசிறி! - sonakar.com

Post Top Ad

Sunday, 9 February 2020

சு.க தலைமைப் பதவியை இலக்கு வைக்கும் தயாசிறி!


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியைக் கைப்பற்றும் நடவடிக்கைகளில் தயாசிறி ஜயசேகர மும்முரமாக ஈடுபட்டு வருவதாக அக்கட்சியின் தகவல் மூலங்கள் தெரிவிக்கின்றன.மைத்ரிபால சிறிசேன, ஜனாதிபதியாகப் பதவி வகித்ததன் ஊடாகப் பெற்றுக்கொண்ட சலுகைகளுடன் திருப்தியாக வாழ்வதாக சுட்டிக்காட்டியுள்ள சு.க முக்கியஸ்தர் ஒருவர் தயாசிறி கீழ் மட்ட அமைப்பாளர்களை ஒன்றிணைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கிறார்.

இதேவேளை, சு.க தனித்துப் போட்டியிட்டால் 2 அல்லது 3 ஆசனங்களுக்கு மேல் பெற முடியாது என டிலான் பெரேரா தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment