ஈஸ்டர் தாக்குதலின் 'இயக்குனர்களே' ஆட்சி புரிகிறார்கள்: நலின் - sonakar.com

Post Top Ad

Saturday, 29 February 2020

ஈஸ்டர் தாக்குதலின் 'இயக்குனர்களே' ஆட்சி புரிகிறார்கள்: நலின்


கடந்த வருடம் உலகை உலுக்கும் வகையில் இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல்களை திட்டமிட்டு இயக்கியவர்களே தற்போது ஆட்சியதிகாரத்தில் இருப்பதாக தெரிவிக்கிறார் ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார.


சம்பவத்தை திட்டமிட்டு நடாத்தியவர்கள் பொதுஜன பெரமுன மற்றும் அதன் கூட்டணியில் முகாமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலின் பலனைக் கொண்டு தேசிய பாதுகாப்பு குறித்த அச்சத்தை உருவாக்கி அதன் பயனால் ஆட்சிக் கவிழ்ப்பு நடந்ததாக எதிர்க்கட்சியினர் தெரிவிக்கின்ற அதேவேளை, அக்காலத்தில் ஆட்சியில் இருந்தவர்களின் பலவீனமே உளவுத்தகவல்கள் ஊடாக அதனைத் தடுக்க முடியாமல் போனமைக்கான காரணம் என நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணையின் போது புலனாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment