மஹிந்த - மோடி சந்திப்பு - sonakar.com

Post Top Ad

Saturday, 8 February 2020

மஹிந்த - மோடி சந்திப்புபிரதமர் பதவியேற்ற பின் உத்தியோகபூர்வ விஜயம் நிமித்தம் இந்தியா சென்றுள்ள மஹிந்த ராஜபக்ச அந்நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.


2010க்கு முற்பட்ட காலத்தில் இந்தியாவுடன் இருந்த இடைவெளியை குறைப்பதற்கு பகீரத பிரயத்தனங்களை மேற்கொண்டு வரும் ராஜபக்ச குடும்பம் இந்தியாவின் சர்ச்சைப் பேர்வழி சுப்பிரமணிய சுவாமியூடாக நரேந்திர மோடியுடன் நல்லுறவை வளர்த்துக் கொண்டுள்ளது.

இன்றைய சந்திப்பில் இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment