சாய்ந்தமருது போல் எங்களுக்கும் வேண்டும்: சபையில் குழப்பம்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 18 February 2020

சாய்ந்தமருது போல் எங்களுக்கும் வேண்டும்: சபையில் குழப்பம்!


சாய்ந்தமருதுக்கு நகர சபை வழங்கப்பட்டது போல் போகககொடவுக்கும் பிரத்யேக உள்ளூராட்சி அதிகாரம் வேண்டும் என கோரி இமதுவ பிரதேச சபையில் குழப்ப சூழ்நிலை உருவாகியுள்ளது.


இன்றைய சபை அமர்வின் போது அங்கு இவ்விடயம் கொண்டுவரப்பட்டிருந்த நிலையில் சாய்ந்தமருக்கு தனியான நகர சபை வழங்க முடியும் என்றால் எங்களுக்கும் அந்த வகையில் தனியதிகாரம் வழங்கப்பட வேண்டும் என ஐ.தே.மு உறுப்பினர் கோரிக்கை விடுத்த நிலையில், பெரமுன உறுப்பினர்களும் ஆக்ரோஷமாக பதிலளித்ததன் பின்னணியில் இச்சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதேவேளை, சாய்ந்தமருது நகர சபை விவகாரம் தேசிய அரசியலில் இனவாத முன்னெடுப்பாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment