மீராவோடை மீரா மஸ்ஜித் விருது விழாவும் கெளரவிப்பு நிகழ்வும் - sonakar.com

Post Top Ad

Friday, 21 February 2020

மீராவோடை மீரா மஸ்ஜித் விருது விழாவும் கெளரவிப்பு நிகழ்வும்

https://www.photojoiner.net/image/jo5ewIJM

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள – மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாயல் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடாத்தும் மீரா மஸ்ஜித் விருது விழாவும், கௌரவிப்பு நிகழ்வும் இன்று வெள்ளிக்கிழமை (21.02.2020) பள்ளிவாயல் தலைவர் ஏ.எல்.அலியார் தலைமையில் பள்ளிவாயலில் நடைபெற்றது.


2017, 2018, 2019ம் ஆண்டுகளில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீடட்சை, கல்வி பொது தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தரம் ஆகிய பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவர்களையும் கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் மீராவோடை பகுதியிலிருந்து அதிபர் சேவைக்கு தெரிவு செய்யப்பட்டோர்கள், துறை சார்ந்தோர்கள் எனப் பலரும் இதில் கௌரவிக்கப்பட்டனர்.

மாணவர்களும் அதிதிகளும் கோலாட்டம், ரபான் வாத்தியம் கொண்டு ஊர்வலமாக விழா இடம் பெற்ற பள்ளிவாயலுக்கு அழைத்து வரப்பட்டனர்.

இந்நிகழ்வுக்கு அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர், கந்தளாய் வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜே.மர்சூக் மற்றும் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.அஹ்ஸாப், கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.ரீ.எம்.ரிஸ்வி, கோறளைப்பற்று மத்தி உதவி திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், உலமாக்கள்; எனப் பலரும் கலந்துகொண்டனர்.

மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாயல் நிர்வாகத்தின் கீழ் உள்ள மீறாவோடை, மாஞ்சோலை, செம்மண்ஓடை, பதுரியா நகர் ஆகிய பகுதிகளைச்சேரந்த மாணவர்களும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களும் அப்பகுதியை சேர்ந்த துறைசார்ந்தவர்களும் கௌரவிக்கப்பட்டனர். 

- எஸ்.எம்.எம்.முர்ஷித் / எச்.எம்.எம்.பர்ஸான்

No comments:

Post a Comment