2020ல் ஹெரோயின் வழக்குகள் 64% அதிகரிப்பு: நிமல் - sonakar.com

Post Top Ad

Saturday, 15 February 2020

2020ல் ஹெரோயின் வழக்குகள் 64% அதிகரிப்பு: நிமல்கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இவ்வருடம் ஹெரோயின் தொடர்பான வழக்குகள் 64 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கிறார் அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா.இலங்கை ஒரு போதைப் பொருள் வர்த்தக மையமாக உருவாகி விட்டதாக கடந்த ஆட்சியிலும் தெரிவிக்கப்பட்டு வந்ததோடு பெருமளவு போதைப் பொருள் கைப்பற்றப்பட்டு வந்தது. இப்பின்னணியில் போதைப் பொருள் வர்த்தகர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என அப்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கூறி வந்தார்.

எனினும், மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு எதிரான மனு நிலுவையில் உள்ள நிலையில் கடுமையான தண்டனை வழங்கப்படாவிட்டால் போதைப் பொருள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த முடியாது என நீதியமைச்சர் நிமல் சிறிபால தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment