சம்மாந்துறை: புதைக்கப்பட்டிருந்த T-56 துப்பாக்கி மீட்பு - sonakar.com

Post Top Ad

Tuesday 21 January 2020

சம்மாந்துறை: புதைக்கப்பட்டிருந்த T-56 துப்பாக்கி மீட்பு


காணி ஒன்றில் புதைக்கபட்டு   கைவிடப்பட்டிருந்த  ரீ-56 ரக துப்பாக்கி ஒன்று சம்மாந்துறை பகுதியில்  மீட்கப்பட்டுள்ளது.


விசேட அதிரடிப்படையினரின் புலனாய்வு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய செவ்வாய்க்கிழமை (21) மாலை சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மலையடிவாரம் பகுதியில்  குறித்த துப்பாக்கியை மீட்ட  விசேட அதிரடிப்படையினரால்   பொலிஸாரிடம் அதனை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

உர பையினுள் சுற்றப்பட்ட நிலையில்   மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த   குறித்த துப்பாக்கி இயங்கு நிலையில் இல்லை எனவும் குறிப்பிட்ட துப்பாக்கியுடன் இரு  ரவைக்கூடுகளும் மீட்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

-பாறுக் ஷிஹான்

No comments:

Post a Comment