
இத்தாலியில் குடியுரிமை பெற்றுள்ள இலங்கைக் குடும்பம் ஒனறுக்கு இரட்டைக் குடியுரிமை பெற்றுத் தருவதாகக் கூறி அதற்கான முற்பனம் ஐயாயிரம் ரூபா பெற்ற குடிவரவு-குடியகல்வு திணைக்கள உயரதிகாரி ஒருவருக்கு இம்மாதம் 31ம் திகதி வரை விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.
குடியுரிமை பகுதியில் உயர் பதவியொன்றில் பணியாற்றும் நபரே இவ்வாறு லஞ்சம் பெற்றுள்ளார்.
இத்தாலியில் குடியிருக்கும் நபர் மற்றும் அவரது மூன்று குழந்தைகளுக்கு இரட்டைக்குடியுரிமையைப் பெற்றுத்தருவதற்கான வாக்குறுதியின் பின்னணயில் இம் முற்பணம் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment