
இலங்கைக்கு மியன்மாரால் பரிசாகக் கொடுக்கப்பட்ட யானை துன்புறுத்தப்படும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில் யானையைத் துன்புறுத்துவதை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார் இலங்கையில் இயங்கும் மியன்மார் தூதரகம்.
பாரிய மனித அழிவுகளை மேற்கொண்டு, ரோஹிங்யர்களைக் கொத்துக் கொத்தாக கொன்று குவித்த மியன்மார் அரசு தாம் ஆறுவருடங்களுக்கு முன் இலங்கைக்குப் பரிசாக வழங்கிய யானைக்காக குரல் கொடுத்துள்ளது.
மியன்குமார என பெயர் கொண்டுள்ள குறித்த யானை அதன் பாகனால் துன்புறுத்தப்படுவது போன்ற காணொளி வெளியானதன் பின்னணியிலேயே மியன்மார் தூதரகம் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment