ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது இன்று அதிகாலை ஏவுகணைத் தாக்குதல் நடாத்தியுள்ளது ஈரான்.
ஈரானின் இராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டமைக்குப் பழி வாங்கும் நோக்கோடு இத்தாக்குதல் நடாத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் தாக்குதலில் உயிரிழந்தோர் பற்றி இதுவரை தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், சுலைமானியின் கொலை யுத்தம் ஒன்றை நிறுத்துவதற்காகவே இடம்பெற்றது என ட்ரம்ப் கூறி வருகின்றமையும், தமது தற்பாதுகாப்புக்காகவே தமது மக்கள் மீது தாக்குதல் நடாத்தும் முகாம்களைக் குறி வைத்துள்ளதாகவம் தாமும் யுத்தம் ஒன்றை ஆரம்பிக்க முயற்சிக்கவில்லையென ஈரானும் தெரிவித்துள்ளது.
சுலைமானியின் இறுதிச் சடங்கின் போது ஏற்பட்ட சன நெரிசலில் 50 பேர் உயிரழந்திருந்தமையும் ஈரானில் நிலவி வந்த அரசுக் கெதிரான மனப் போக்கு மாறி மக்கள் தற்போது ஒற்றுமைப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment