
ரஞ்சன் ராமநாயக்கவின் துப்பாக்கி பயிற்சிக்காகப் பயன்படுத்தியமை தொடர்பில் விளக்கமளிப்பது தொடர்பில் ரணில் - ரஞ்சன் இடையே இடம்பெற்ற தொலைபேசி உரையாடல் தம்மைக் கொலை செய்ய இருவரும் மேற்கொண்ட சதித்திட்டம் என மஹிந்தானந்த தெரிவித்த கருத்துக்களை மறுதலித்துள்ளார் ரணில் விக்கிரமசிங்க.
தேவைப்படின் குறித்த உரையாடலை சபாநாயகர் செவிமடுத்து விட்டு தானோ ரஞ்சனோ அவ்வாறு திட்டம் தீட்டியிருந்தால் அதனை நாடாளுமன்றுக்கு அறிவிக்குமாறும் ரணில் கோரிக்கை விடுத்துள்ளார்.
ரஞ்சனின் தொலைபேசி உரையாடல்கள் பல வெளியாகி அரசியல் மட்டத்தில் பல்வேறு வாத விவாதங்களை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment