அமெரிக்க துருப்புகளை வெளியேறுமாறு ஈராக் தீர்மானம் - sonakar.com

Post Top Ad

Sunday, 5 January 2020

அமெரிக்க துருப்புகளை வெளியேறுமாறு ஈராக் தீர்மானம்


ஈராக்கில் நிலை கொண்டுள்ள அமெரிக்க மற்றும் அனைத்து சர்வதேச கூட்டணி படையினரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என சம்பிரதாயபூர்வ தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது ஈராக்கிய நாடாளுமன்றம்.பக்தாதில் வைத்து ஈரானிய இராணுவ தளபதி கொல்லப்பட்டதன் பின்னணியில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் இது சட்டரீதியாக அமுலுக்கு வரா தீர்மானமாகும்.

எனினும், ஈராக்கில் ஐ.எஸ். அமைப்பினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை கூட்டணி படையினர் தற்காலிகாமக நிறுத்தியுள்ளமையும் ஈராக்கில் சுமார் 5000 அமெரிக்க படையினர் நிலை கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment