6500 பில்லியன் பிணை முறி மோசடியை மறைக்கவே சதி: கிரியல்ல - sonakar.com

Post Top Ad

Sunday, 5 January 2020

6500 பில்லியன் பிணை முறி மோசடியை மறைக்கவே சதி: கிரியல்ல


2005 முதல் 2015ம் ஆண்டு வரையில் மஹிந்த அரசில் இடம்பெற்ற 6500 பில்லியன் ரூபா பெறுமதியான பிணை முறி மோசடியை மறைக்கவே அரசு தடுமாறிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கிறார் லக்ஷ்மன் கிரியல்ல.


டிசம்பர் 3ம் திகதி கணக்காய்வு அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவிருந்த நிலையிலேயே நாடாளுமன்ற தவணை முடிக்கப்பட்டிருந்ததாகவும் 2015ல் 10 மில்லியன் ரூபா பிணை முறி மோசடி விவகாரமே பூதாகரமாக பேசப்பட்டதாகவும் தெரிவிக்கிறார்.

இந்நிலையில், சபாநாயகரிடம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் கிரியல்ல தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment