சஜித்துக்கு ரணில் வழங்கும் "இறுதி வாய்ப்பு"! - sonakar.com

Post Top Ad

Monday, 27 January 2020

சஜித்துக்கு ரணில் வழங்கும் "இறுதி வாய்ப்பு"!


ஏற்பாடு செய்யப்படும் சந்திப்புகளுக்கு வருகை தராமல் தொடர்ச்சியாக கட்சி ஒற்றுமையைக் குழப்பும் வகையில் சஜித் பிரேமதாச நடந்து கொள்வதாக குற்றஞ்சாட்டப்பட்டு வரும் நிலையில் அவருக்கு இறுதி வாய்ப்பொன்றை வழங்க ரணில் இணக்கம் தெரிவித்துள்ளார்.


திஸ்ஸ அத்தநாயக்கவின் தலையீட்டில் ரணில்-கரு-சஜித் இடையேயான சந்திப்பொன்றுக்கு தற்போது மீண்டும் இணங்கியுள்ள ரணில், சஜித் இதற்கு முதல் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களுக்கு வராமையை சுட்டிக்காட்டி, இதுவே தான் இவ்வாறு ஒரு சந்திப்புக்கு இணங்கும் இறுதித் தடவையென தெரிவித்துள்ளார்.

பொதுத் தோதல் நேரத்தில் தலைமைத்துவம் பற்றி சர்ச்சையை ஏற்படுத்தாது தேர்தல் முடிந்த பின்னர் அது பற்றி விரிவாக ஆராய்வதே சிறந்ததென ரணில் கருதுவதாகவும் திஸ்ஸ தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment