சிறுமி துஷ்பிரயோகம்: முன்னாள் பி.ச தலைவருக்கு சிறை! - sonakar.com

Post Top Ad

Friday, 17 January 2020

சிறுமி துஷ்பிரயோகம்: முன்னாள் பி.ச தலைவருக்கு சிறை!


14 வயது சிறுமியைத் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுக்குள்ளாகியிருந்த முன்னாள் அக்குரஸ்ஸ பிரதேச சபை தலைவர் லியனகே சுனிலுக்கு 15 வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம்.


2012ல் இடம்பெற்ற குறித்த சம்பவத்தின் பின்னணியில் நீண்ட காலமாக விசாரிக்கப்பட்டு வந்த வழக்கில் இன்று கொழும்பு உயர் நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பு வழங்கியுள்ளதுடன் பாதிக்கப்பட்டவருக்கு 250,000 இழப்பீடும் வழங்க உத்தரவிட்டுள்ளது..

குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த நபருக்கு 15 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment