பொதுத் தேர்தலில் பிரதான கட்சிகளில் போட்டியிட பௌத்த துறவிகளுக்கு இடம் தரப்படாவிட்டால் அரசியலில் ஈடுபட்டுள்ள பிக்குகள் தனித்துக் களமிறங்கும் நிமித்தம் சங்க பெரமுன எனும் புதிய கட்சியை தோற்றுவிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
முக்கிய பௌத்த துறவிகள் பலர் பிக்குகள் அரசியலில் ஈடுபடுவதைத் தவிர்க்க வலியுறுத்தி வருவதுடன் பிரதான கட்சிகள் இடம்தரக்கூடாது என குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையிலேயே, ரதன தேரர் மற்றும் முன்னாள் நாடாளுமன்றில் அங்கம் வகித்த பிக்குகள் இணைந்து ராஜகிரிய விகாரையில் இது தொடர்பில் வார இறுதியில் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment