சீனாவிலிருந்து வருபவர்களை பரிசோதிக்க பிரத்யேக ஏற்பாடு - sonakar.com

Post Top Ad

Monday, 27 January 2020

சீனாவிலிருந்து வருபவர்களை பரிசோதிக்க பிரத்யேக ஏற்பாடு


சீனாவில் ஆட்கொல்லி வைரசாக பரவியுள்ள கொரனா வைரஸ் இதுவரை 80க்கு மேற்பட்ட உயிரிழப்புக்குக் காரணமாகியுள்ள நிலையில் சீனாவிலிருந்து இலங்கை வரக்கூடிய பயணிகளை பரிசோதிக்க கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிரத்யேக பகுதியொன்று ஒதுக்கப்பட்டுள்ளது.சீனாவில் தங்கிக் கல்வி கற்கும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அதேவேளை விமான நிலையத்தில் பரிசோதனை நடாத்தும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு கையுறை மற்றும் முகமூடி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரையான தகவலின் அடிப்படையில் சீனாவில் சுமார் 3000 பேர் குறித்த வைரசினால் பாதிக்கப்பட்டு சுகயீனமுற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment