
ஈரான் - அமெரிக்கா விவகாரத்தால் இலங்கை எதிர்நோக்கவுள்ள ஆபத்துகள் பற்றி இங்கு யாரும் பேசுவதாக இல்லையென கவலை வெளியிட்டுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.
ஈரான் - அமெரிக்கா இடையே போர் மூண்டால் அது மத்திய கிழக்கை எவ்வாறு பாதிக்கும், எண்ணை விலையை எவ்வாறு பாதிக்கும், மத்திய கிழக்கில் பணிபுரியும் இலங்கையரை எவ்வாறு பாதிக்கும், தேசிய பாதுகாப்புக்கு எவ்விதமான அச்சுறுத்தல் உள்ளது என எந்த ஒரு கரிசணையும் இல்லாமலேயே இங்கு அரசியல்வாதிகள் இருப்பதாக அவர் மேலும் தெரிவிக்கிறார்.
இச்சூழ்நிலைக்கான காரணம், ரஞ்சன் ராமநாயக்கவின் ஒலிப்பதிவுகள் எனவும் ஆளுங்கட்சி அதில் கவனம் செலுத்திக் கொண்டிருப்பதால் மக்கள் நலன் குறித்து கவலையின்றி இருப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment