ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிக்க ஏகமானதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் எதிர்வரும் வாரம் நுகேகொடயிலிருந்து பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் பதவிக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவிக்கும் தொடர்பில்லையென சுட்டிக்காட்டப்படுகின்ற அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவி இழுபறி தொடர்பில் நாளை திங்கட்கிழமை ரணில் - சஜித் - கரு இடையே சந்திப்பொன்று இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், கூட்டணியின் அனைத்து கட்சிகளும் சஜித் தலைமையில் அணி திரள இணங்கியுள்ள நிலையில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment