2023 வரை இலங்கைக்கு GSP+ - sonakar.com

Post Top Ad

Sunday, 19 January 2020

2023 வரை இலங்கைக்கு GSP+ஐரோப்பிய யூனியனால் வழங்கப்படும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையினை 2023ம் ஆண்டு வரை நீடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மஹிந்த ஆட்சியில் இழந்த குறித்த வரிச்சலுகையை பலத்த விமர்சனங்களுக்கு மத்தியில் ரணில்-மைத்ரி கூட்டரசு பெற்றிருந்தது. இதனூடாக ஆடை வர்த்தகம் மற்றும் மீன் ஏற்றுமதி மீளவும் பயனடையும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது, ஆட்சி மாற்றத்தின் பின்னரும் 2023 வரை இலங்கைக்கான வரிச்சலுகையை நீடிக்கத் தீர்மானித்திருப்பதாக ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment