நீதிபதிகள் கிஹான் - பத்மினியிடம் வாக்குமூலம் பதிவு - sonakar.com

Post Top Ad

Monday, 20 January 2020

நீதிபதிகள் கிஹான் - பத்மினியிடம் வாக்குமூலம் பதிவு


ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவு சர்ச்சைகளின் பின்னணியில் ஓய்வு பெற்ற நீதிபதி பத்மினி ரணவக்க மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலாபிட்டிய ஆகியோரிடம் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.


நேற்று மாலை நீதிபதி கிஹானிடம் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடாத்தப்பட்டுள்ளதுடன் இன்று காலை  ஓய்வுபெற்ற நீதிபதி பத்மினியிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரஞ்சன் ராமநாயக்க நீதித்துறையில் தலையிட்டுள்ளதாக தற்போது தெரிவிக்கப்படும் நிலையில், குற்றங்கள் நிரூபணமானால் ஏழு வருடங்களுக்கு அவரது சிவில் உரிமைகள் பறிக்கப்படக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment