நீதித்துறையில் தலையிடாததால் தான் விலக்கினார்கள்: விஜேதாச - sonakar.com

Post Top Ad

Saturday, 25 January 2020

நீதித்துறையில் தலையிடாததால் தான் விலக்கினார்கள்: விஜேதாச

RQdVfzJ

நீதியமைச்சராக இருந்த போதிலும் தான் நீதித்துறையில் தலையிட்டு, அரசுக்குத் தேவையான விடயங்களை செய்யாததால் தான் தான் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக தெரிவிக்கிறார் விஜேதாச ராஜபக்ச.


மைத்ரி - ரணில் கூட்டரசில் நீதியமைச்சராக இருந்த விஜேதாச, மஹிந்த ஆட்சியின் போது இடம்பெற்ற ஊழல்-மோசடிகளை விசாரிப்பதற்கு இடையூறாக இருந்து விசாரணைகளைத் தாமதப்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டே நீக்கப்பட்டிருந்தார்.

எனினும், அரசுக்குத் தேவையான வகையில் தலையீடுகளை செய்ய மறுத்ததாலேயே தான் நீக்கப்பட்டதாக தற்போது விஜேதாச தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment