தமிழில் தேசிய கீதத்தை இசைக்க முடியாது என அரச தரப்பினர் தெரிவித்து வரும் நிலையில் அவ்வாறு எந்த முடிவும் எடுக்கப்படவில்லையென்கிறார் மஹிந்த ராஜபக்ச.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் சொல்வதெல்லாம் அரசாங்கத்தின் நிலைப்பாடில்லையெனவும் அரசாங்கம் இது தொடர்பில் எவ்வித முடிவையும் எட்டவில்லையெனவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.
தமிழ் ஊடக பிரதானிகளுடனான சந்திப்பில் வைத்தே இவ்வாறு தெரிவித்த அவர், தமிழர்களின் விசேட நிகழ்வொன்றில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு தடையேதும் இல்லையெனவும் தெரிவித்ததோடு ஒரு நாட்டுக்கு ஒரு மொழியில் தேசிய கீதம் இருப்பதே நல்லதெனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment