ரஞ்சனுக்கு 29ம் திகதி வரை விளக்கமறியல் - sonakar.com

Post Top Ad

Wednesday, 15 January 2020

ரஞ்சனுக்கு 29ம் திகதி வரை விளக்கமறியல்சர்ச்சைக்குரிய தொலைபேசி ஒலிப்பதிவுகளின் பின்னணியில் கைதான ரஞ்சன் ராமநாயக்கவை 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.நீதித்துறையில் தலையீட்டின் பின்னணியில் ரஞ்சன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் விளக்கமளித்துள்ளனர்.

பொலிசாரால் கைப்பற்றதாகக் கூறப்படும் ஒலிப்பதிவுகள் பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கடும்போக்குவாத பௌத்த அமைப்புகளினால் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டிருந்ததன் பின்னணியில் இக்கைது இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் ஒலிப்பதிவுகளை பகுப்பாய்வுக்குட்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment