மஹேஷ் சேனாநாயக்க - ரிசாத் விவகாரம் தொடர்பில் விசாரணை! - sonakar.com

Post Top Ad

Friday, 10 January 2020

மஹேஷ் சேனாநாயக்க - ரிசாத் விவகாரம் தொடர்பில் விசாரணை!


ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் கைதான சந்தேக நபர்களை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அப்போதைய இராணுவ தளபதி மஹேஷ் சேனாநாயக்கவுக்கு அழுத்தம் பிரயோகித்ததாக வெளியான தகவல்கள் தொடர்பில் புதிதாக விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கிறது ஸ்ரீலங்கா பொலிஸ்.குறித்த சந்தர்ப்பத்திலும் இவ்விவகாரம் சர்ச்சையாக வெடித்திருந்த நிலையில் தனக்கு அவ்வாறு அழுத்தம் எதுவும் பிரயோகிக்கப்படவில்லையென மஹேஷ் தெரிவித்திருந்தார்.

எனினும், தற்போது அதனை புதிதாக விசாரிப்பதாக பொலிசார் தெரிவிக்கின்ற அதேவேளை முன்னாள் இராணுவ தளபதி வெளிநாடு ஒன்றில் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment