ஐந்து கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை சட்டவிரோதமாக நாட்டுக்கு வெளியே கடத்திச் செல்ல முயன்ற மூவர் விமான நிலையத்தில் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெமட்டகொட, கிரான்ட்பாஸ் பகுதிகளைச் சேர்ந்த முறையே 33 மற்றும் 26 வயது நபர்கள் இருவரும் கேகாலையைச் சேர்ந்த 15 வயது சிறுவனுமே சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாட்டவர் ஒருவரால் விமான நிலையத்துக்குள் வைத்து கைமாற்றப்பட்ட பொதியை எடுத்துக் கொண்டு செல்ல முயன்றதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment