UK பிரதமருக்கு கண்டனம் தெரிவிக்கும் ஒமல்பே தேரர் - sonakar.com

Post Top Ad

Tuesday 17 December 2019

UK பிரதமருக்கு கண்டனம் தெரிவிக்கும் ஒமல்பே தேரர்


தனது தேர்தல் வெற்றியின் பின் ஐக்கிய இராச்சியத்தில் வாழும் தமிழ் சமூகத்துக்கு நன்றி தெரிவித்த அந்நாட்டின் பிரதமர் பொரிஸ் ஜோன்சனை கண்டித்துள்ள ஒமல்பே சோபித்த தேரர், பொதுநலவாய அமைப்பு மற்றும் ஐ.நாவிலிருந்தும் இலங்கை வெளியேற வேண்டும் என தெரிவிக்கிறார்.



பிரெக்சிட் பிரச்சினை முடிந்ததும் இலங்கை விவகாரத்தில் தலையிடக் கூடிய வகையில் ஜோன்சனின் பேச்சு இருப்பதாகவும் இலங்கையில் நல்லிணக்கமும் பொறுப்புக்கூறலும் பற்றி கருத்து வெளியிடும் அளவுக்கு அவர் இலங்கையின் பிரதமரா ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரா எனவும் தேரர் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஐக்கிய இராச்சியத்தின் நடந்து முடிந்த பொதுத் தேர்தலின் போது பெருவாரியான இலங்கைத் தமிழ் சமூகம் தொழிற்கட்சியையே ஆதரித்திருந்த அதேவேளை சிங்கள சமூகம் அதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருந்தது. எனினும், தேர்தல் வெற்றியில் கன்சர்வடிவ் கட்சியின் தலைவர் ஜோன்சன் வெற்றி பெற்றுள்ளதோடு தனது உரையில் தமிழ் சமூகத்துக்கும் நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment