கல்வி முறைமையூடாக சிங்கள சமூகம் சிதைக்கப்படுகிறது: மஹிந்த - sonakar.com

Post Top Ad

Friday 27 December 2019

கல்வி முறைமையூடாக சிங்கள சமூகம் சிதைக்கப்படுகிறது: மஹிந்த


தற்போது இலங்கையில் உள்ள கல்வி முறைமை சிங்கள சமூகத்தை பால்ய வயதிலிருந்தே சிதைக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் இது குறித்து கவனம் எடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கிறார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.விசேடமாக, பாடசாலைப் பாடப்புத்தகங்களில் வரலாறும் பௌத்த தர்மமும் அடுத்தடுத்த தலைமுறையினரை முறையாகச் சென்றடையாத வண்ணம் நாட்டில் இயங்கும் என்.ஜி.ஓக்கள் ஆளுமை செலுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.

இந்நிலையில், தமது அரசு பௌத்த சங்க சபாவுடன் இணைந்து ஞாயிறு தஹம் பாடசாலையை அபிவிருத்தி செய்து இளைய சமுதாயத்தினரைக் கவர்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளதாகவும் மஹிந்த தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment