வெள்ளை வேன் சாரதிகள் எனக் கூறிக் கொண்ட இருவர் வேறு ஒருவர் ஊடாக ராஜித சேனாரத்னவை அணுகி உதவி கோரினார்களே தவிர ராஜித அவர்களை ஏற்பாடு செய்யவில்லையென தெரிவிக்கிறார் ஹிருனிகா பிரேமசந்திர.
குறித்த இருவரும் தாம் வெள்ளை வேன் சாரதிகள் எனவும் தம்மிடம் இருக்கும் தகவல்களை பகிரங்கப் படுத்த விரும்புவதாகவும் தெரிவித்து ராஜிதவிடம் உதவி கோரியதாகவும், ராஜித அவர்களுக்கு தைரியமூட்டி செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்து கொடுத்ததாகவும் ஹிருனிகா விளக்கமளித்துள்ளார்.
எனினும், தாம் ராஜிதவின் அறிவுறுத்தலுக்கமையவே பேசியதாக குறித்த இருவரும் விசாரணையில் தெரிவித்ததாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment