தேர்தல் ஒன்றை வெல்வதற்கு கட்சித் தலைவர் பதவி அவசியம் என்றில்லையென சந்திரிக்காவுக்குப் பின் கோட்டாபே ராஜபக்சவுக்கு நிரூபித்துள்ளதாக தெரிவிக்கின்ற அஷு மாரசிங்க, சஜித் பிரேமதாச சுதாரித்துக் கொண்டு தயாராக வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி முன்நிறுத்தப் போகும் பிரதமர் வேடபாளர் அவரே எனவும் தெரிவிக்கின்ற அஷு மாரசிங்க, போட்டிகளில் தோல்வியுற்று துவண்டு விடுவது போன்று அரசியலில் இருக்க முடியாது எனவும் உடனடியாக சஜித் தேர்தல் நடவடிக்கைகளுக்குத் தயாராக வேண்டும் எனவும் தெரிவிக்கிறார்.
எதிர்க் கட்சித் தலைவர் பதவியைப் பெற்றுக்கொண்டுள்ள போதிலும் கட்சித் தலைமையும் தமக்குத் தரப்பட வேண்டும் என சஜித் உறுதியாகத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment