பாதாள உலகம் - போதைப் பொருள் ஒழிப்புக்கு நடவடிக்கை: கமல் - sonakar.com

Post Top Ad

Sunday, 15 December 2019

பாதாள உலகம் - போதைப் பொருள் ஒழிப்புக்கு நடவடிக்கை: கமல்


பாதாள உலகம் மற்றும் போதைப் பொருள் வர்த்தகத்தை ஒழிப்பதற்கான விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படப் போவதாக தெரிவிக்கிறார் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன.


தனது வழிகாட்டியான தற்போதைய ஜனாதிபதியும் முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான கோட்டாபே ராஜபக்சவின் வழியில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து நாட்டில் பாதாள உலகம் இல்லாமல் செய்யப்படும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின் போதும் அடங்கியிருக்கும் பாதாள உலகத்தினர் சிறிது காலத்தில் மீண்டும் தமது நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் கடந்த கால வரலாற்றுக்கு மத்தியில் தற்போதைய பாதுகாப்பு செயலாளர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment